பசுமாடு இறந்த சோகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை...!

பாசமாக வளர்த்த பசுமாடு இறந்த சோகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்

Update: 2022-03-13 15:45 GMT
தஞ்சாவூர்,
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் மேல சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் சந்திரசேகர் (வயது 37) விவசாயி. இவருடைய மனைவி வசந்தி (36). தன் வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் மிகவும்  பாசமாக வளர்த்த மாடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து உள்ளது.  இந்த மாட்டின் இழப்பை வசந்தியால் தாங்க முடியாமல் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து உள்ளார்.

அப்போது வசந்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரை காப்பாற்றி தஞ்சை அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் செய்திகள்