மதுரையில் பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் முயற்சி; சிலம்ப சண்டை பயிற்சியில் உலக சாதனை

மதுரையில் பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடர்ந்து 30 நிமிடம் சிலம்ப சண்டை செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

Update: 2022-03-13 11:27 GMT
மதுரை,

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மேலூர் சாலை டெக்கத்லான் திடலில், 35 ஜோடிகள் தொடர்ச்சியாக 30 நிமிடங்களுக்கு சிலம்ப சண்டை செய்து உலக சாதனை படைத்தனர்.

இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு வேலம்மாள் மருத்துவ கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் சிவசிதம்பரம் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். 

மேலும் செய்திகள்