7 கோவில்களில் வருடாபிஷேகம்

அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தொகுதியில் ஒரே வீதியில் உள்ள 7 கோவில்களில் வருடாபிஷேகம் நடந்தது.

Update: 2022-03-12 16:45 GMT
அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி கிராமத்தில் முத்துமாரியம்மன், சண்முக விநாயகர்,  சுப்பிரமணியசாமி, திரவுபதி அம்மன், ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள், மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர், ஆஞ்சநேயர் ஆகிய 7 கோவில்கள் உள்ளன. ஒரே வீதியில் 200 மீட்டருக்குள் இந்த  கோவில்கள் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது.
இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து வருடாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து முத்துமாரியம்மன், விநாயகர், முருகர் உள்ளிட்ட சாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்  குழுத் தலைவர் காமராஜ், துணை தலைவர் தனுசு, செயலாளர் வாசு என்ற பூரா சாமி, பொருளாளர் கணேஷ்குமார், உறுப்பினர் அங்கம்மாள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்