ஓடும் வேனில் திடீர் தீ

புதுவையில் ஓடும் வேனின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

Update: 2022-03-12 15:53 GMT
புதுச்சேரி
புதுவை எல்லைப்பிள்ளைசாவடியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அதில் ஒரு வேன் பழுதாகவே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் பழுது பார்க்கப்பட்டது. 
அதைத்தொடர்ந்து சோதனைக்காக அந்த வேனை ஓட்டி பார்த்தனர். குரும்பாப்பேட் பாண்லே அருகே வந்தபோது வேனின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் வேன் முழுவதும் குபுகுபுவென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் வேனை நடுரோட்டில் நிறுத்தி விட்டு வெளியேறினார். இதுகுறித்து தீயைணப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் புதுவை, கோரிமேட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. வேனில் மின்சார கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்