செங்கல்பட்டு அருகே பாலாற்று பாலத்தில் சீரமைப்பு பணி அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே உள்ள உயர் மட்ட பாலத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை நள்ளிரவில் அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
சென்னை,
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அருகே பாலாற்றின் மீது கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்டார்.
பாலாற்றின் மீது இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், திண்டிவனம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள உயர்மட்ட பாலம் 1954-ம் ஆண்டிலும், சென்னை நோக்கி செல்லும் சாலையில் உள்ள உயர்மட்ட பாலம் 1994-ம் ஆண்டிலும் கட்டப்பட்டன. இப்பாலங்களில் உள்ள விரிவடையும் தன்மை கொண்ட இணைப்புகள் பழுதடைந்து விட்டன. இதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. வாகனங்கள் பாலத்தின் மீது செல்லாமல் நிறுத்த கலெக்டர் அனுமதி வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, இந்திய தேசியநெடுஞ்சாலை ஆணையத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இப்பணியினை மேற்கொள்வதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
போர்க்கால அடிப்படையில் பணிகள்
தற்போது, திண்டிவனம் நோக்கி செல்லும் பாலம் சீரமைப்புப் பணி முடிவடைந்து, போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. சென்னை நோக்கி செல்லும் புதிய பாலத்தில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படவேண்டிய 24 விரிவு இணைப்புகளில் 20 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை 16-ந்தேதிக்குள் நிறைவு செய்து, போக்குவரத்து அனுமதிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலர் சோம சேகரன், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் ஜனகுமார், தலைமை என்ஜினீயர்கள் பாலமுருகன், சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.