நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கு 2 வது கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதுச்சேரி
நீட் தேர்வு அடிப்படையிலான படிப்புகளான எம்.பி.பி.எஸ்., ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 2-வது கட்ட கலந்தாய்வில் அரசு, நிர்வாகம், வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இடங்கள் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் வருகிற 17-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேரவேண்டும். இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சமீபத்திய குடியிருப்பு, சாதி சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்கள் அதை சமர்ப்பித்து சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.