புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார் நாளை காலை 6 மணிக்கு விடுதலை என தகவல்

சென்னை, புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார் நாளை காலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மூர்த்தி, பெஞ்சமின் தெரிவித்தனர்.

Update: 2022-03-11 14:57 GMT
கோப்புப்படம்
சென்னை,

சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். 

அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க கீழ் கோர்ட்டு மறுத்து விட்டதால், அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இதையடுத்து கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை புழல் சிறையில் இருந்து நாளை காலை 6 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார். இந்த தகவலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான மூர்த்தியும் பெஞ்சமினும் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்