திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி...!

திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து லாரி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

Update: 2022-03-11 09:29 GMT
சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம்  மலைப் பாதையில் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்ற வந்தது. இந்த லாரி மாலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்த முயன்றார். இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் சாலை தடுப்பில் மோதி லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்