மர்மமான முறையில் தொழிலதிபர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை...!

எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்த தொழிலதிபர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-11 05:31 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நத்தபட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 45). தொழிலதிபரான இவர் வேடசந்தூரில் நிதி நிறுவனம் மற்றும் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்திவருகிறார்.

வேடசந்தூரில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு நேற்று நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார்.
 
இந்த நிலையில் இன்று காலை நத்தபட்டி பகுதியில் உள்ள மண் சாலையில் தொழிலதிபர் பாலசுப்பிரமணி தலையில் காயங்களுடம் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் போரில் சம்பவ இடத்துக்கு வந்த கூம்பூர் போலீசார் உயிரிழந்த பாலசுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது இந்த சம்பம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்