திருவள்ளூரில் வாகன சோதனை; ரூ.1.39 லட்சம் அபராதம் வசூல்
விதிகளை மீறிய வாகனங்கள் தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் அதிவேகம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய வாகனங்கள் குறித்து செங்குன்றம் வட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் விதிகளை மீறிய வாகனங்கள் தொடர்பாக 40 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.1,39,000 அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.