பேரறிவாளனுக்கு ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு

பேரறிவாளனுக்கு ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு.

Update: 2022-03-10 19:01 GMT
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடியலுக்கு முன்பு வந்த வெள்ளியை போல, பேரறிவாளனுக்கு நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்த நீதி இப்போது பெருமளவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலேயே இருக்கக்கூடிய தமிழக அரசு, தடையில்லாத அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கியது முக்கிய காரணமாகும். இது வரவேற்கத்தகுந்த ஒன்று.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்