"பாஜக மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்" - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
பாஜக மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த நிலையில், உத்திரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
“உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனி பெருமான்மையுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஜி வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. இதன் மூலம் பாஜகவின் மேல் வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனி பெருமான்மையுடன் திரு.@myogiadityanath ஜி வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது
— Dr.L.Murugan (@Murugan_MoS) March 10, 2022
பாஜகவின் மேல் வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது#YogiWillBeBackpic.twitter.com/3J6TX2nbbB