ஆம்னி காரில் 140 கிலோ குட்கா கடத்திய வாலிபர் கைது...!
ஆம்னி காரில் 140 கிலோ குட்கா பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்து உள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் சின்னக்கம்பாளையம் பிரிவு அருகே இன்று மதியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உடுமலையிலிருந்து தாராபுரம் நோக்கி வந்த ஆம்னி காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்று உள்ளது. இதனல் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஆம்னி காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் ஆம்னி காரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சுமார் 140 கிலோ குட்கா பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்து. இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஆம்னி காரை ஓட்டி வந்த உடுமலையை சேர்ந்த அருண்குமார் (வயது26) கைது செய்தனர்.