சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடித்து வெளியான படம், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்த படத்தில் நடிக்க சிம்புவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டது. இதற்கு ரூ.1 கோடியே 51 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் பாக்கி தொகை ரூ.6 கோடியே 49 லட்சத்தை பெற்றுத்தரக்கோரி சிம்பு நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்தார். அதற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார். அதில், படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சிம்புவிடம் இருந்து வசூலித்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
அபராதம்
இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறி, அவரிடம் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு வழக்கு தொடர்ந்தார். அதில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், வழக்குக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவில்லை. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி வேல்முருகன், தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் வழக்கு செலவு (அபராதம்) விதித்தார். விசாரணையை ஏப்ரல் 1-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.