மின்சாரம் தாக்கி மாடியில் இருந்து விழுந்து ஏ.சி.மெக்கானிக் உயிரிழப்பு...!

மின்சாரம் தாக்கி மாடியில் இருந்து கீழே விழுந்த ஏ.சி.மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-03-09 15:00 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் சைமன் (வயது 36). இவர் அடுக்கு மாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். எனவே வீட்டில் இருந்த பொருட்களை மாற்றும் பணியில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது சைமன் ஏ.சி. மெஷினை கழற்றி உள்ளார்.  ஏ.சி.க்கு செல்லும் வயர்களை அப்புறப்படுத்தும்போது வீட்டின் அருகே தெருவில் இருந்த மின் வயரில், ஏ.சியின் வயர் உரசி உள்ளது.

அப்போது மின்சாரம் தாக்கியதில் சைமன்  தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் சைமன்  தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சைமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து அவரது அண்ணன் ஜேம்ஸ் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

மேலும் செய்திகள்