மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி - 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-03-09 03:23 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள சொரகொளத்தூர் கிராமத்தில்  சரண்ராஜ் மீதான முன் விரோத்தால் அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொல்ல முயன்றார்.  இதில் சரண்ராஜை காப்பாற்ற வந்த ரேணுகோபால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சரண்ராஜ் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்