இரண்டாம் நிலை காவலர்கள் உள்பட 11 ஆயிரத்து 765 பேருக்கு பணி நியமன ஆணை
இரண்டாம் நிலை காவலர்கள் உள்பட 11 ஆயிரத்து 765 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9 ஆயிரத்து 831 இரண்டாம் நிலை காவலர்கள், 1,200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள 15 உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் 13 திட்ட உதவியாளர் நிலை-I பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் காலியாக உள்ள 47 சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். ஒட்டுமொத்தமாக 11 ஆயிரத்து 765 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வேளாண்மை அலுவலர்
வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள 17 தோட்டக்கலை உதவி இயக்குனர், 162 தோட்டக்கலை அலுவலர், 361 வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சு.முத்துசாமி, எஸ்.ரகுபதி மற்றும் அந்தந்த துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.