சோதனையில் சிக்கிய ரூ.36 கோடி போதை பொருட்கள் அழிப்பு
சோதனையில் பிடிபட்ட ரூ.36 கோடி போதை பொருட்கள் அழிக்கப்பட்டது.
சென்னை,
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போதை பொருட்கள் சோதனையில், பல மாவட்டங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் போதை ஒழிப்புப்பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டன. கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, வழக்கு முடிவடைந்த நிலையில், அவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை செங்கல்பட்டு அருகே நேற்று போதை ஒழிப்பு பிரிவு போலீசார் எரித்து அழித்தனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ மற்றும் போதை பொருட்கள் எரியூட்டும் தொழிற்சாலையில் எரியூட்டும் பணி நடைபெற்றது. 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 9 டன் போதை பொருட்கள் இவ்வாறு எரிக்கப்பட்டன.
ரூ.36 கோடி மதிப்பு
போதை தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் ராஜகோபால், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தாமஸ் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.36 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, மதுரை, கன்னியாகுமரி, சென்னை புறநகர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் 90 வழக்குகளில் பறிமுதலான போதை பொருட்கள் இங்கு எரியூட்டப்பட்டுள்ளது. கஞ்சா செடி வளர்ப்பு கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடியின் பாகங்கள், பல கோடி மதிப்புள்ள கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் இங்கு அழிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு கோர்ட்டு உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் தொழிற்சாலையில் போதைபொருட்களை அழிப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளில் இதுவே அதிக அளவு எரிக்கப்பட்ட போதை பொருள் என போதை ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.