கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் தடுப்பூசி செலுத்துவதில்லை அமைச்சர் வருத்தம்
கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் தடுப்பூசி செலுத்துவதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தம் தெரிவித்துள்ளார்,
சென்னை,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் உலக மகளிர் தின விழா சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
ஒதுக்கீட்டால் அதிக பெண் மேயர்கள்
மருத்துவத்துறையில் 70 சதவீதம் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி. தற்போது பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதன் விளைவாக தமிழகத்தில் 21 மேயர்களில் 11 பேர் பெண் மேயர்களாக உள்ளனர்.
இந்தியாவிலே தமிழகத்தில்தான் பெண்கள் அதிகம் பேர் மேயர்களாக உள்ளனர். ஆண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நிலை வந்துவிடுமோ என்ற அளவில் தமிழகத்தில் பெண்கள் மேம்பாடு சிறப்பாக உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்திய பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தின் மூலம் 35 லட்சம் பேர் நாள் ஒன்றுக்கு பயன் பெறுகின்றனர்.
பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா பெருந்தொற்று நேற்று (நேற்று முன்தினம்) 158 என மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. 495 பேர் மட்டுமே தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்துவதில்லை
அண்டை நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இன்னும் 1.30 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 6 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டது வருத்தமளிக்கிறது. பல்வேறு ஏற்பாடுகள், அறிவிப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தொற்று முடிவுக்கு வந்து விட்டது என மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். வரும் சனிக்கிழமை நடைபெறும் 24-வது மெகா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு
உக்ரைன் நாட்டில் இருந்து வந்துள்ள தமிழக மாணவர்களின் கல்வி குறித்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சிக்கல் காரணமாக தாமதமாகி உள்ளது. விரைவில் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.