சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா கோலாகல தொடக்கம்..!
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாகத் தொடங்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் குண்டம் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும். இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் வந்து அம்மனை வணங்கிச் செல்வார்கள். இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக இத்திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு இவ்விழா விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை ஒரு மணி அளவில் பூச்சாட்டு விழா தொடங்கியது.
மேலும் இன்று இரவு 11 மணிக்கு பண்ணாரி மாரியம்மன் உற்சவமூர்த்தி ஒரு சப்பரத்திலும் சருகு மாரியம்மன் இன்னொரு சப்பரத்திலும் அலங்கரிக்கப்பட்டு பண்ணாரி மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு சிக்கரசம்பாளையம் அம்மன் கோயிலில் தங்குவார்கள். இதைத் தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு சிக்கரசம்பாளையத்திலிருந்து புறப்பட்டு ஊர் முழுவதும் அம்மன் சிலையைத் திருவீதி உலா செல்லப்படும்