‘டாஸ்மாக்’ மதுபானங்கள் விலை ரூ.80 வரை அதிகரித்தது குவாட்டர் ரூ.10 உயர்ந்தது
தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபானங்கள் விலை ரூ.80 வரை அதிகரித்தது. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 உயர்ந்தது.
சென்னை,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (டாஸ்மாக்) மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பூஜை போடுவது இல்லை, கடை வாசலில் தண்ணீர் தெளிப்பது இல்லை, ஆனாலும் தினமும் கோடிக்கணக்கில் வருவாய் வரும் இடமாக ‘டாஸ்மாக்’ கடைகள் இருக்கிறது என்று வேடிக்கையாக சொல்வது உண்டு. மதுபானம் மீது அதிகம் பேருக்கு மோகம் இருப்பதால் அவற்றின் விலை ஏறினாலும் விற்பனை மட்டும் குறைவது இல்லை.
எனவே அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டால் அரசின் பார்வை முதலில் திரும்புவது ‘டாஸ்மாக்’ பக்கம்தான். பின்னர் மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரி உயர்த்தப்படும். இதன்மூலம் மதுபானங்கள் விலை அதிகரிக்கும். அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 5-ந் தேதி அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை மீண்டும் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரிப்பு
இதைத்தொடர்ந்து மதுபானங்கள் விலை குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.80 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு டாஸ்மாக் கடைகளில் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது.
சாதாரண ரக மதுபான வகைகள் குவாட்டர் (180 மி.லி.) ரூ.10-ம், ‘ஆப்’ (375 மி.லி.) ரூ.20-ம், ‘புல்’ பாட்டில் (750 மி.லி.) ரூ.40-ம் விலை அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் உயர் ரக மதுபான வகைகள் குவாட்டருக்கு ரூ.20-ம், ‘ஆப்’க்கு ரூ.40-ம், ‘புல்’ பாட்டிலுக்கு ரூ.80-ம் விலை உயர்ந்துள்ளது. ‘பீர்’ வகைகளும் ரூ.10 விலையேறி உள்ளது.
அதாவது ரூ.120-க்கு விற்பனையான சாதாரண ரக மது வகைகள் ரூ.130 ஆகவும், ரூ.140-க்கு விற்பனையான நடுத்தர சரக்கு வகைகள் ரூ.160 ஆகவும் அதிகரித்து இருக்கிறது. உயர் ரக மதுபானங்கள் விலை (குவாட்டர்) ரூ.160 முதல் ரூ.630 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. விலை உயர்வு மூலம் உயர் ரக மதுபானங்கள் ரூ.180 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி அன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை வரி 15 சதவீதம் உயர்த்தப்பட்டு மதுபானங்கள் விலையேறியது. தற்போது சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மதுவகைகள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அரசுக்கு கூடுதல் வருவாய்
தமிழகத்தில் தனியார் வசம் இருந்த மதுக்கடைகள் கடந்த 2003-ம் ஆண்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்த நிதி ஆண்டில் (2003-2004) தமிழக அரசுக்கு ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மூலம் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சம் வருவாய் கிடைத்தது.
பின்னர் ஆண்டுக்கு ஆண்டு வருவாய் அதிகரித்து, 2011-2012-ம் நிதி ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் தமிழக அரசுக்கு வந்தது. தற்போது 10 ஆண்டுகளில் டாஸ்மாக் வருவாய் அபரிமிதமாக பெருகி உள்ளது. கடந்த 2020-21-ம் நிதி ஆண்டில் ‘டாஸ்மாக்’ வருவாய் ரூ.33 ஆயிரத்து 811 கோடியே 14 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மதுவகைகள் விலையேற்றம் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.10 கோடியே 35 லட்சமும், ‘பீர்’ வகைகள் மூலம் ரூ.1 கோடியே 76 லட்சமும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ‘டாஸ்மாக்’ நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரத்து 396 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுபிரியர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் மதுபானங்களின் விலை நேற்று திடீரென உயர்த்தப்பட்டது. இதற்கான புதிய விலை பட்டியலும் டாஸ்மாக் கடைகள் முன்பு ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கம்போல மதுபாட்டில்கள் வாங்க வந்த மதுபிரியர்கள் புதிய விலை பட்டியலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மதுவிலை உயர்த்தப்பட்டது குறித்து கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்னும் சிலர் மிகச்சரியாக பணம் கொண்டு வந்திருந்ததால் மதுபாட்டில் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து திருமால்பூர் பகுதியை சேர்ந்த மிஷின் ஆபரேட்டர் கணேஷ் கூறியதாவது:-
மதுபாட்டில் விலையை திடீரென உயர்த்தியது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. நான் ரூ.120 மதுபாட்டில் வாங்குவேன். இப்போது அது ரூ.130-க்கு விற்பனை ஆகிறது. ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் நிர்ணயித்த விலையை விட, கூடுதலாக 10 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் மதுபாட்டில்களை விற்பனை செய்கின்றனர். தற்போது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்திருப்பது எங்களை போன்ற சாமானியர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலையை குறைக்க வேண்டும்
திருவண்ணாமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி வல்லரசு கூறுகையில், ‘நான் கூலி வேலை செய்து வருகிறேன். தினமும் வேலை முடிந்ததும், உடல் வலி தெரியாமல் இருப்பதற்காக கொஞ்சமாக மது குடிப்பேன். தற்போது, தமிழக அரசு மதுவிலையை உயர்த்தி இருப்பது எங்களை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறது. தினக்கூலியாக ரூ.300 முதல் ரூ.500 சம்பாதிப்பவர்கள், தற்போது மதுவிலை உயர்வால், பாதி சம்பளத்தை டாஸ்மாக் கடையிலே கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மீதி பணத்தை வைத்து எங்களால் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி அங்குசாமி கூறுகையில், ‘எங்களை போன்ற அன்றாட கூலித்தொழிலாளர்கள் திடீர் மது விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் இருப்பவர்கள் எவ்வளவு விலை உயர்த்தினாலும் வாங்குவார்கள். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? எங்கேயோ போர் நடக்கிறது என்று விலைவாசியை ஏற்றுவது, அரசின் மீதான மக்களின் நம்பிக்கை இழக்க செய்கிறது. உடனடியாக மதுவிலை உயர்வை தமிழக அரசு குறைத்திட வேண்டும்’என்றார்.