பொதுமக்களிடம் ரகளை செய்த 16 பேர் கைது

புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2022-03-07 19:08 GMT

புதுச்சேரியில் வெவ்வேறு இடங்களில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பொதுமக்களுக்கு தொந்தரவு

 புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் பொது இடங்களில் ரகளையில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கண்காணித்து, கைது செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தார். இதை அறிந்த லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவர், ஜீவானந்தம் வீதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அதிரடி கைது

தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே நின்று கொண்டு அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட சக்திநகரை சேர்ந்த குமார் (40), சதீஷ் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையத்தில் உள்ள மதுபார் அருகில் குடிபோதையில் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்ட ஒதியம்பட்டை சேர்ந்த கோபி, குரும்பாபேட் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

  பூமியான்பேட்டை விக்டோரியாநகர் பூங்கா அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட ரெட்டியார்பாளையம் போலீசார், அங்கு பெண்களை கிண்டல் செய்ததாக பாவாணர் நகரை சேர்ந்த விமல் (39), முருகன் (42), ரமேஷ் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதேபோல் போலீசார் புதுவையில் வெவ்வேறு இடங்களில் ரகளையில் ஈடுபட்ட மொத்தம் 16 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்