கோவை: ஆம்னி கார் மீது லாரி மோதி விபத்து; 2 குழந்தைகள் உயிரிழப்பு...!

ஆம்னி கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2022-03-06 03:05 GMT
கோவை,

கோவை மாவட்டம் க.க.சாவடி  அருகே கேரளாவில் இருந்து ஒரு ஆம்னி கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் சாலையின் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் ஆம்னி காரில் இருந்த இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இது குறிந்து அறிந்த போலீசார் சம்வப இடத்துக்கு விரைந்து வந்து ஆம்னி காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்,

கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஆம்னி கார் விபத்துக்கு உள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்