குழந்தைக்கு பெயர் வைத்ததை சொல்லாததால் கணவன் தற்கொலை....!

குழந்தைக்கு பெயர் வைத்ததை மனைவி சொல்லாததால் மனவேதனையில இருந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2022-03-05 07:35 GMT
நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை அருகே உள்ள உச்சணம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவரது மனைவி ரேவதி(23). இவர்களுக்கு  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. கணேசன் திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டியில் தங்கியிருந்து பால் வியாபாரம் செய்து வருகிறார். 

மாதம் ஒரு முறை வீட்டுக்குவந்து மனைவியை பார்த்து சென்று உள்ளார். இந்நிலையில் மனைவி ரேவதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. மனைவி ரேவதி தனது குழந்தைக்கு பெயர் வைத்ததை கணவனுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது

பெற்ற பிள்ளைக்கு பெயர் வைத்ததை கூட சொல்லாததால் கணவன் கணேசன் மிகுந்த மனவேதனை இருந்து உள்ளார். பின்னர் உச்சணம்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு வந்த கணேசன்,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து உள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதியினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணேசனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்