தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிப்பு: அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கம்
தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிப்பு: அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினாலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
அதன்படி, வார்டு கவுன்சிலர்கள் ஜெகதீசன், உமாராணி, கவிதா ராணி, பிச்சை கணபதி, செல்வி, தவசி, ராஜேந்திரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் அ.தி.மு.க.வினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு, சேலம் புறநகர் மாவட்டம் அயோத்தியாப்பட்டிணம் அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்ட கவுன்சிலர்கள் நீக்கப்படுகிறார்கள்.
அதன்படி, பரமேஸ்வரன், அருண்குமார், சத்யா மகேந்திரன், உமாராணி முத்துசாமி, சாந்தி பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பி.முத்துசாமி, எஸ்.மகேந்திரன், பி.பெருமாள் ஆகியோர் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அதேபோல், விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் முகமது செரீப், கே.சேகர், திண்டிவனம் நகர சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் ஸ்ரீதர், மஸ்தான், விழுப்புரம் மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர் யோகேஸ்வரன், செஞ்சி ராஜாராணி ஆகியோரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.