கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,473.16 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை
கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,473.16 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் மூலமாக, அனைத்து ஊரக வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்படி ஊரக பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,473.16 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.771.73 கோடியும், மத்திய அரசு சார்பில் ரூ.581.48 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.