மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும்வகையில் பெண்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தல்

பெண்கள் படித்து முடித்தப்பிறகு, மற்றவர்களிடம் சென்று வேலை கேட்காமல், நீங்கள் உங்கள் சுயகாலில் நின்று மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்று அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-03-04 14:59 GMT
காரைக்கால்
பெண்கள் படித்து முடித்தப்பிறகு, மற்றவர்களிடம் சென்று வேலை கேட்காமல், நீங்கள் உங்கள் சுயகாலில் நின்று மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்று  அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தியுள்ளார்.

 மகளிர் தின விழா

புதுச்சேரி அரசு சார்பில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், சர்வதேச மகளிர் தின விழா  சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு,  போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா தலைமை தாங்கினார். புதுச்சேரி டெக்னாலஜி பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், கல்லூரியின் இயக்குனர் பிரேமா, முதல்வர் குமார் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா பேசியதாவது:-
நான் நல்ல நிலைக்கு வருவதற்கு காரணமான ஆசிரியப்பெருமக்களையும், அமைச்சர் ஆவதற்கு காரணமான முதல்- அமைச்சர்அவர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன். 

 திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்

மாணவிகள் படிப்பு ஒன்றையே குறிக்கோளாக நினைத்து படித்து முன்னேற வேண்டும். முக்கியமாக, படித்து முடித்த பிறகு, மற்றவர்களிடம் சென்று வேலை கேட்கின்ற நிலைமையை மாற்றி, நீங்கள் உங்கள் சுயகாலில் நின்று மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும்வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
மேலும், இங்குள்ள மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் எடுக்காதவர்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண்களுக்கென்று தனியாக லைசென்ஸ் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. உரிய ஆவணத்துடன் சென்று பயன்படுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். பெண்கள் யாரையும் ஒப்பிட்டு வாழாமல் உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். குறிப்பாக, இவர்களைப் போன்று அவர்களைப் போன்று ஆக வேண்டுமென்று வாழாதீர்கள். நல்ல குறிக்கோளுடன் நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும். பெற்றோர்களிடம் அன்பு காட்டுங்கள் பெற்றோர்களை மதியுங்கள் அவர்கள் கூறுவதை கேட்டு வாழ்க்கையில் முன்னேற கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்