மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி: கவுன்சில் கூட்டங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி: கவுன்சில் கூட்டங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்.

Update: 2022-03-03 18:44 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதித்து, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்தான கவுன்சிலர் விவாதங்கள் இணையதளத்தில் நேரலை செய்யப்படும் என்பது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் பிரதானமான அம்சம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய வார்டு சார்ந்த மக்கள் பிரச்சினைகளில் எவற்றை விவாதிக்கிறார்கள் என்பதை மக்கள் அறியவேண்டும். அதற்கு நடக்கின்ற கூட்டங்கள் மக்களுடைய நேரடி பார்வைக்கு செல்வது உள்ளாட்சி ஜனநாயகத்தில் மிக அவசியம்.மேயர், துணை மேயர், தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் மறைமுக தேர்தலில் இருந்தே தொடங்க வேண்டும். ஆகவே எல்லா மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் கவுன்சில் கூட்டங்களை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்