மிச்சர் கடையில் தீ விபத்து; ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்...!
மேலூரில் மிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் இளங்கோ. இவர் சிவன் கோவில் தெவில் மிச்சர் கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்த கடையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
கடை தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் இளங்கோ, அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். .
தீ மளமளவென்று எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர், மேலூர் தீயணைப்பு வீரர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடையில் எரிந்த தீயை சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.