ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு புகார்: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷன்
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட அமலாக்கத்தில் முறைகேடு நடந்ததா? என்பதை கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டம் 25.6.2015 அன்று தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் அந்தஸ்திற்கு உயர்த்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அதில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டன. இதற்கு அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
என்னென்ன நிலை?
இந்த திட்டத்திற்கான செலவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் 50 சதவீதம் செலவழிக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் அந்த 11 திட்டங்களுக்கும் மத்திய அரசு ரூ.5,390 கோடியையும், தமிழக அரசு ரூ.4 ஆயிரம் கோடியையும் அனுமதித்து ஆணை பிறப்பித்தன.
இந்த திட்டத்தின் கீழ் வரும், ரூ.10 ஆயிரத்து 651 கோடி மதிப்புள்ள 644 பணிகளில் ரூ.2,327 கோடி செலவில் 257 பணிகள் முடிக்கப்பட்டன. ரூ.7,947 மதிப்புள்ள 339 பணிகள் அமலாக்கத்தில் உள்ளன. ரூ.154 கோடி மதிப்புள்ள 10 பணிகள், டெண்டர் நடவடிக்கைகளில் உள்ளன. மேலும் சில பணிகளும் டெண்டர் நிலையிலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையிலும் உள்ளன.
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்த சூழ்நிலையில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்குவது குறித்து, கடந்த ஜனவரி 6-ந்தேதியன்று சட்டசபையில் எம்.எல்.ஏ. ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முதல்-அமைச்சர், ‘‘தியாகராய நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களை அடைத்து, பிளாட்பாரங்களை உயர்த்தி ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கிய காலத்தில் அதை கவனிக்காமல் விட்டதால், அங்கு தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்த ஒரு வாரம் ஆகிவிட்டது.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள். அது நீங்கள் செய்த கோளாறு. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஏதோ டெண்டர் விட்டோம், அதில் நிதி வந்தது, அதை வைத்து செலவு செய்தோம் என்றிருந்த நிலையில், அதற்கு என்ன கணக்கு என்று அறிய ஒரு விசாரணைக்குழு போடப்போகிறோம்” என்று குறிப்பிட்டார்.
ஒரு நபர் விசாரணைக் குழு
அந்த அறிவிப்பை அரசு கவனமுடன் பரிசீலித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டபுள்யூ.சி. டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்தியது பற்றி இந்தக்குழு விசாரிக்கும்.
அந்த திட்டத்திற்கான பணிகள், அதற்கான வழிகாட்டுதலுடன் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டதா? இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அனுமதித்த மானியங்கள், வழிகாட்டு நெறிமுறைப்படி செலவழிக்கப்பட்டதா?
திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதற்கான நடைமுறை பின்பற்றப்பட்டதா? திட்ட அமலாக்கத்தில் ஏதாவது குறைகளை தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியுள்ளதா? அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? தவறுகள் நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஆகியவை பற்றி இந்தக்குழு விசாரிக்கும்.
இந்தக்குழு விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் இந்த விசாரணைக்குழுவின் அலுவலகம் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.