ஹெல்மெட் அணிந்து பதவி ஏற்க வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்
திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்துக்கு ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக பதவி ஏற்க வந்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சியில் தி.மு.க. வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும், 2 வார்டுகளில் காங்கிரசும், 9 வார்டுகளில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் பா.ஜனதாவும், ஒரு வார்டில் தே.மு.தி.க.வும், மற்ற 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இந்தநிலையில் நேற்று கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர், பா.ஜ.க. கவுன்சிலர் ஆகியோர் வாகனங்களில் வந்து ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி அருகில் இறங்கி நின்றனர்.
தலையில் ஹெல்மெட்
பின்னர் அங்கிருந்து பெண் கவுன்சிலர்கள் உள்பட அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் என மொத்தம் 10 பேர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டனர். பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்ததும் அங்கு கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் கோபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஹெல்மெட் அணிந்தது ஏன்?
கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து பதவி ஏற்றது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் கூறுகையில், தி.மு.க.வினர் தங்கள் கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளிக்காவிட்டால் பதவி ஏற்க வரும்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மண்டை உடைக்கப்படும் என அலைபேசி மூலம் அச்சுறுத்தி வந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலரின் உறவினர்களும் அச்சுறுத்தப்பட்டனர். மக்கள் பிரதிநிதிகளின் உடல், உயிர், உடைமைகள், உரிமைகளை பாதுகாக்கவும் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், உயிர்பயத்துடன் தலைகவசம் அணிந்து வந்து கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர் என்றார்.