சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை

சென்னை,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-02 07:13 GMT
சென்னை,

சென்னை புரசைவாக்கம் , மேடவாக்கம் , சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. புரசைவாக்கதத்தில் சுரேஷ் லால்வானி என்ற பைனான்சியர் வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேடவாக்கம் அருகே ஈ.கே  குழுமத்திற்கு சொந்தமான வீடு அலுவலகங்களிலும் சோதனை நடைப்பெயற்று வருகிறது. அதுமட்டுமன்றி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி சாரதி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபெரம்பத்தூரில் அருகே உள்ள சோமங்கலத்தில் ஜே .கே குவாரியில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்