80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-03-02 07:08 GMT
ஜெயங்கொண்டம்,
 
பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மனைவி வள்ளியம்மை (வயது 80). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  வள்ளியம்மை  தனது மகன் பழனிசாமி வீட்டில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் வள்ளியம்மை இறவாங்குடி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்துள்ளார்.

தனது உறவினர் வீட்டில் உள்ள வள்ளியம்மை வயல்களுக்கு செல்வது ஆடுமாடுகளை கவனிப்பது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று இரை இல்லாமல் பட்டினியாக கிடந்த ஆடுகளை மேய்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை அழைத்து கொண்டு வள்ளியம்மை சென்றுள்ளார்.  அங்கு தனியாக இருந்த வள்ளியம்மையை  மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.  

பின்னர் நடு காட்டுக்குள் மயங்கிய நிலையில் கிடந்த வள்ளியம்மையை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மூதாட்டி வள்ளியம்மை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜெயங்கொண்ட போலீசார், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்