வரலாறு காணாத உச்சம்; தங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.77 உயர்ந்து ரூ.4,875 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக உக்ரைன் - ரஷிய போர் காரணமாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் பின்னர் குறைவதும் என இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும்
அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.616 உயர்ந்து ரூ.39,000-க்கு விற்பனை ஆகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கம் ரூ.77 உயர்ந்து ரூ.4,875 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 71.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.