தமிழகத்தில் 366 பேருக்கு கொரோனா: அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்தது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 55 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 209 ஆண்கள், 157 பெண்கள் என மொத்தம் 366 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 96 பேரும், கோவையில் 54 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், நீலகிரியில் 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, திருவாரூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில் 12 வயதுக்குட்பட்ட 37 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 54 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 32 லட்சத்து 24 ஆயிரத்து 787 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 49 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 1,088 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 515 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 196 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று கோவையில் மட்டும் 86 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 37 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 4 பேர் கொரோனா நோய்தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,013 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 5 ஆயிரத்து 745 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.