கார் ஓட்டி பழகிய போது விபத்தை ஏற்படுத்திய 70 வயது முதியவர் - மூதாட்டி பலி

70 வயது முதியவர் கார் ஓட்டி பழகும் போது ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி பலியானார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-02-28 13:55 GMT
காரைக்கால்,

காரைக்கால், திருநள்ளாறை அடுத்த செல்லூர் அகலங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன்(வயது70). விவசாயம் செய்துவரும் இவர், இன்று பகல், தனது தெருவில் கார் ஓட்டி பழகி வந்தார். அப்போது, தெருவில் நின்றிந்த செல்லம்மாள்(76), முத்துலட்சுமி(48), புனிதா(36) ஆகிய 3 பெண்கள் மீது கார் மோதியது. 

கார் மோதியதில் 3 பேரும் படுகாயம் நடைந்தனர்.  உடனே அருகில் உள்ளோர், 3 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசார், காரை தவறாக ஓட்டிய முருகையன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்