பாஜக கொடி கட்டியவர்களுக்கு அடி உதை 4 பேர் கைது
பாஜக கொடி கட்டியவர்களுக்கு அடி உதை 4 பேர் கைது
திருநள்ளாறில் பா.ஜ.க. கொடி கட்டியவர்களை அடித்து உதைத்து கொடியை கிழித்த 4 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ.க. கொடி
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை மணல்மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). கட்டிட தொழிலாளி. நேற்று இரவு பேட்டை கிராமத்தில் தனது நண்பர்கள் வேல்முருகன், தினேஷ் ஆகியோருடன் பா.ஜ.க கொடியேற்று விழாவுக்காக வீதிகளில் கொடிகளை கட்டிக்கொண்டிருந்தார்.
பேட்டை மெயின் ரோடு, காளியம்மன் கோவில் தெரு அருகில் உள்ள மின்கம்பங்களில் 3 பேரும் பா.ஜ.க. கொடிகளை கட்டிக் கொண்டிருந்தனர்.
4 பேர் கைது
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிருத்திவிராஜ் (22), கண்ணன் (24), ராஜா (23) ஜெயபால் (38) ஆகிய 4 பேரும் சேர்ந்து தெருவில் எப்படி கொடி கட்டலாம் என்று கேட்டு 3 பேரையும் அடித்து, உதைத்துள்னர். மேலும் பா.ஜ.க. கொடியையும் கிழித்து எறிந்துள்ளனர். இதில் காயம் அடைந்த 3 பேரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிருத்திவிராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.