திருநங்கை சேர்ந்து வாழ மறுத்ததாதல் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை...!

திருநங்கை சேர்ந்து வாழ மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

Update: 2022-02-27 05:40 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காடு கூடல்வாடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது23). இவருக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சேர்ந்த பாக்யராஜ் (எ)கவிதா என்ற திருநங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டடு உள்ளது. இவர்கள் கடந்த 4 வருடமாக ஒன்றாக வழ்ந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை கவிதா, தினேஷின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு உங்கள் மகனை அழைத்து செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து தினேஷின் தந்தை ரவி அவரக்கு அறிவுரை கூறி அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் தினேசால் திருநங்கை கவிதாவை மறக்க முடியவில்லை. இதனால் மீண்டும் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த தினேஷ், குடி போதையில் கவிதாவின் வீட்டில் உள்ள சேலையை எடுத்து ஏரிக்கரையோரம் உள்ள மரத்தில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின் போரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ஸ்ரீபெரும்புதூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவ குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்