உக்ரைனில் உள்ள 5 ஆயிரம் தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை; ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை

உக்ரைனில் சிக்கி தவிக்கும் 5 ஆயிரம் தமிழர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-02-27 04:13 GMT




சென்னை,


உக்ரைன் மற்றும் ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.  இதற்காக இந்திய அரசும் ஏற்பாடுகளை செய்துள்ளது.  இதன்படி, ருமேனியா, போலந்து மற்றும் பிற நாடுகளின் வழியே இந்திய குடிமக்களை அழைத்து வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  தொடர்ந்து தேவைக்கேற்றபடி விமானங்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிவிப்பில், உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் 5 ஆயிரம் தமிழர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்கு உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளின் ஒப்புதலோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்