உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவர்கள்...!
உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவர்களை மீட்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை,
உக்ரைனில் உள்ள மாணவர்ளை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை மீட்க கோரி பெற்றோர்கள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனில் மருத்துவ கல்லூரியில் படித்துவரும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் நெய்னா முகமது மகன் முகமது சமி(வயது17) கோபாலப்படினம் ஜகுபர் சாதிக் மகன் ரியாஸ் கான்(வயது20) இந்த இரண்டு மாணவர்களை மீட்க கோரி அவரது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்,
உக்ரைனில் நடந்து வரும் போரால் அங்கு உள்ள எங்கள் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதே போன்று தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல், உணவு தண்ணீர் இன்றி சுரங்க பாதையில் தங்கி உள்ளனர். அவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.