உக்ரைனில் சிக்கி உள்ள சேலம் மாணவி - பெற்றோர்கள் மீட்க கோரிக்கை

உக்ரைனில் சிக்கி உள்ள சேலத்தை சேர்ந்த மாணவியை மீட்டு தரக்கோரி பெற்றோர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்

Update: 2022-02-26 05:20 GMT
ஆத்தூர்,

உக்ரைனில்  3-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு உள்ள மாணவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் முத்துசாமி.  இவரது மகள் ரித்திகா உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில்  4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை நாட்டுக்கு மீட்டு வரவேண்டி அவரது பெற்றோர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது,

உக்ரைனில் சிக்சி உள்ள எங்கள் மகள் கடந்த இரண்டு நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்வில்லை. ஆகையால் எங்கள் மகளுக்கு என்ன ஆனாது என்று தெரியவில்லை. மத்திய மாநில அரசுகள் விரைந்து நடிக்கை எடுத்து எங்கள் மகளை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்