தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை சரிவு

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.568 குறைந்து ரூ.37,904க்கு விற்பனையாகிறது .

Update: 2022-02-26 04:23 GMT
சென்னை,

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரத்திலேயே தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டது. நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ரூ.232-ம், பவுனுக்கு ரூ.1,856-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 951-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 608-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

நேற்று  தங்கம் விலை சற்று குறைந்தது.  22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1136 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.142 குறைந்து ரூ.4,809- ஆக விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 சரிந்து ரூ.70க்கு விற்பனையானது.  

இந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.568 குறைந்து ரூ.37,904க்கு விற்பனையாகிறது . அதே போல் கிராமுக்கு ரூ .71 குறைந்து ரூ .4,738-க்கு விற்பனையாகிறது 

உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்த முதல் நாளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்றும் இன்றும் விலை சரிந்துள்ளது.

மேலும் செய்திகள்