புதுச்சேரியை சேர்ந்தவர்களின் விவரங்களை தெரிவிக்க உதவி மைய எண்
உக்ரைனில் வசிக்கும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் விவரங்களை தெரிவிக்க உதவி மைய எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் வசிக்கும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் விவரங்களை தெரிவிக்க உதவி மைய எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
ரஷியா- உக்ரைன் போர்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரஷியா-உக்ரைன் இடையே போர் காரணமாக உக்ரைனில் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. புதுச்சேரியில் இருந்து பல மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பலர் படிப்பதற்காகவும், தொழில் நிமித்தமாகவும் உக்ரைனில் வசித்து வருகிறார்கள்.
உக்ரைன் நாட்டிற்கு புலம் பெயர்ந்து தற்போது புதுச்சேரிக்கு வர இயலாமல் தவிப்பர்களின் உறவினர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மீண்டும் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொண்டனர்.
உதவி மையம்
அதன்படி உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுவை மக்களின் விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. அவர்களின் விவரங்களை தெரிவிக்க கட்டணம் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மாநில அவசர கால செயல் மையம் 1070, 1077, 0413-2253407, காவல்துறை மத்திய கட்டுப்பாட்டு அறை-112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
காரைக்காலை சேர்ந்தவர்கள் மாவட்ட அவசர கால செயல் மையம் 1070, 1077, 04368-228801, 227704 ஆகிய எண்களையும், மாகியை சேர்ந்தவர் உதவி மையம் 1800 425 2949, 0490-2332222 ஆகிய எண்களையும், ஏனாமை சேர்ந்தவர் உதவி மையம் 1800 425 2303, 0884-2325105 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ள வேண்டும்.
கண்காணிப்பு
புதுவையை சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கும், அவர்களை தாயகம் அழைத்து வரவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை 1800 118 8797 என்ற கட்டணமில்லா எண்ணிலும், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உதவிக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் +380 997300428, + 380 997300483 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் புதுவை அரசு மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.