தேர்தலில் குறைவான வாக்கு;மனமுடைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தற்கொலை...!

தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றதால் மனமுடைந்த மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

Update: 2022-02-25 08:14 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.  இந்த தேர்தல் முடிவால் மக்கள் நீதி மய்யம் கட்சி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது.

திருப்பூர் மாநகராட்சியின் 36-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மணி என்பவர் போட்டியிட்டார். ஆனால் வேட்பாளர் மணி வெறும் 40 வாக்குகள் மற்றுமே பெற்று உள்ளார். 

இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மணி இன்று தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.  

தேர்தலில் குறைவான வாக்கு வாங்கியதால் மன உளைச்சலில் இருந்த மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்