உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2022-02-25 06:02 GMT
சென்னை,

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதலை தொடங்கியுள்ளது. அங்கு தமிழக மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். உக்ரைனின் வான்வழிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் விமானம் மூலமாக அங்கிருந்து இந்தியர்களை மீட்க இயலவில்லை.

மாற்றுவழியாக உக்ரைனில் இருந்து வாகனம் மூலமாக எல்லையோரப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்துவந்து பின்னர் கத்தாரில் இருந்து விமானம் மூலமாக தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணி வரை தமிழக மாணவர்கள் 916 பேர் தமிழக அரசை தொடர்பு கொண்டுள்ளதாக அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட, மாநில அளவிலும், டெல்லியிலும் தொடர்பு அலுவலர்களை நியமித்துள்ளது தமிழக அரசு.

மேலும் செய்திகள்