ரஜினிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்1976-ம் ஆண்டு வரையிலான தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை ‘உங்களில் ஒருவன்' என்ற பெயரில் எழுதியுள்ளார்.
முதல் பாகமாக வெளிவரும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் 28-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.