ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முயற்சிக்க வேண்டும்
‘ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முயற்சி மேற்கொள்வது அவசியமான நடவடிக்கை’ என்றும், ‘இதன்மூலம் உலக அளவில் அளப்பரிய பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்’ என்றும் முன்னாள் ராணுவ லெப்டினெண்ட் கர்னல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினெண்ட் கர்னல் நா.தியாகராஜன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
1991-ம் ஆண்டு ஒரே நாடாக இருந்த சோவியத் ரஷியா (யு.எஸ்.எஸ்.ஆர்.) 15 நாடுகளாக பிரிந்தன. சோவியத் ரஷியாவாக இருந்தபோது, நேரடியாக மற்றும் மறைமுகமாக அதிகாரத்தில் இருந்த 14 நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான ‘நேட்டோ’வில் உறுப்பு நாடாக இணைந்துவிட்டன. ஆனால் உக்ரைன் மட்டும் அந்த கூட்டமைப்பில் இணையாமல் இருந்தது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் தொன்பாஸ் பிரதேசத்தில் ரஷிய கலாசாரத்தை சேர்ந்த, ரஷிய மொழி பேசும் ஏராளமான மக்கள் வாழ்கிறார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு இப்பகுதியை டன்ஸ்ட்க், லுகான்ஸ்க் என 2 குடியரசுகளாகவும் அப்பகுதி மக்கள் அறிவித்தும் கொண்டார்கள். இந்த 2 குடியரசுகளுக்கும் ரஷியாவே அதிகாரபூர்வ அங்கீகாரத்தை சமீபத்தில் வழங்கியிருந்தது.
இந்தநிலையில் உக்ரைனை கைப்பற்ற ரஷியா தீவிரம் காட்டிய நிலையில், தற்காப்பு நடவடிக்கையாக ‘நேட்டோ’வில் இணைய உக்ரைன் தீவிரம் காட்டியது. உக்ரைன் ‘நேட்டோ’வில் இணைந்தால் ‘நேட்டோ’ படைகளால் தனது நாட்டின் அரசியல், ராணுவம், பொருளாதாரம் தாண்டி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ரஷியா அஞ்சியது. இதனால்தான் உக்ரைன் ‘நேட்டோ’வில் இணைவதை ரஷியா கடுமையாக எதிர்த்தது.
ரஷியாவுக்கு பாதிப்பா?
இந்தநிலையில் உலக நாடுகள் எச்சரிக்கையையும் மீறி நேற்று அதிகாலை உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருக்கிறது. சிறிய நாடான உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருக்கும் நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனால் இது எந்தவிதத்திலும் ரஷியாவை பாதிக்காது என்பதே நிதர்சன உண்மை.
ஏனெனில் ஐரோப்பிய நாடுகளுக்கு 50 சதவீத எரிபொருள் ஏற்றுமதி ரஷியாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர 3-ல் 2 மடங்கு அளவுக்கு எண்ணெய் மற்றும் எரிபொருள் உற்பத்தி மூலமாகவே ரஷியா பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறது. எனவே இதையெல்லாம் முன்கூட்டி யோசித்துதான் இந்த போரை ரஷியா மேற்கொண்டிருக்கிறது. ஆனால் ‘நேட்டோ’ மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நம்பி தற்போது உக்ரைன்தான் தவித்து கொண்டிருக்கிறது. காரணம் தன்னை காட்டிலும் அதிக படைபலம் கொண்ட ரஷியா தாக்க வரும்போது, இதர நாடுகள் தந்த போர் கருவிகளை நம்பி உக்ரைன் களத்தில் இறங்கியதே இதற்கு காரணம்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
தற்போது உக்ரைனின் விமான தளங்கள், தகவல் தொடர்பு மையங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடந்துவிட்டன. அடுத்து ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடைபெறலாம். இந்த போர் அடுத்தக்கட்டத்தை நெருங்கினால் என்ன ஆகுமோ, இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன. எனவே நட்பு நாடான ரஷியாவிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அப்படி இந்தியா ஒரு நல்ல, சுமுகமான முடிவை ஏற்படுத்துவதின் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை ஓங்கி ஒலிக்கும். அளப்பரிய பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். எனவே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உடனடியாக களத்தில் இறங்கி முயற்சிப்பது அவசியம். அதையே உக்ரைன் மற்றும் உலக நாடுகள் விரும்புகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.