நடிகர் அஜித் திரைப்படம் வெளியான தியேட்டர் முன் பெட்ரோல் குண்டு வீச்சு
அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியான தியேட்டர் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வாலிபர் காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.
கோவை,
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் நேற்று வெளியானது.
கோவை 100 அடி ரோட்டில் உள்ள கற்பகம் காம்ளக்ஸ் தியேட்டரிலும் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டது. அங்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இதற்காக ரசிகர்கள் அதிகாலை 4 மணி முதலே அந்த தியேட்டரில் திரண்டு நின்றனர். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர் திடீரென பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீயை பற்றவைத்து தியேட்டர் முன்பு வீசிவிட்டு வேகமாக தப்பிச்சென்றுவிட்டனர். இதில் அந்த பாட்டில் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது.
வாலிபர் காயம்
பாட்டில் வெடித்து சிதறியதில் அங்கு, பிளக்ஸ் பேனர் கட்டிக் கொண்டு இருந்த கோவை ரத்தினபுரியை சேர்ந்த அஜித் ரசிகர் நவீன் குமார் (வயது 22) என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
மேலும் தியேட்டர் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். தியேட்டர் முன் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் யார்? பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன?. ரசிகர்கள் மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்பது உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சந்தேகத்தின்பேரில் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நாட்டு வெடியை கட்டிய ரசிகர்
நாமக்கல்லில் உள்ள ஒரு தியேட்டரில் வலிமை படத்தை பார்க்க அதிகாலை 2 மணி முதலே ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில் அதிகாலை 4 மணி ஆகியும் முதல் காட்சி திரையிடப்படவில்லை. எனவே ரசிகர்கள் கோபம் அடைந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் தியேட்டரின் நுழைவுவாயிலில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் தடியடி
நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தியேட்டரில் வலிமை படம் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் அங்குமிங்கும் சென்று சாகசங்கள் செய்தவாறு சுற்றி வந்தனர். மேலும் தியேட்டர் முன் மேளம் அடித்து ஆடினார்கள். இதற்கு போலீசார் தடை விதித்து இருந்த நிலையில், ரசிகர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டு 10 நிமிடம் ஓடிய நிலையில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 15 நிமிட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் பலரும் தியேட்டர் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
வலிமை திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஒளிபரப்ப தாமதத்தால் சேலத்தில் ஒரு சினிமா தியேட்டர் கண்ணாடிகளை ரசிகர்கள் உடைத்து, கேட்டை பெயர்த்தனர்.