சிவகங்கை
மதுரை முனிச்சாலையை சேர்ந்தவர் முத்தழகு(வயது 31). இவரும் மகேந்திரன்(28) என்பவரும் சிவகங்கையில் உறவினர் ஒருவர் இறந்த நிகழ்வுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனத்தை மகேந்திரன் ஓட்ட முத்தழகு பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் சிவகங்கையை அடுத்த முத்துப்பேட்டை அருகே வரும்போது அந்த வழியாக சிலிண்டர் ஏற்றி வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து நடந்தபோது, அந்த வழியில் வந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி காயமடைந்த முத்தழகுவை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.