"மரைன் எலைட்" படையை நிறுவ தமிழக அரசு உத்தரவு

கடல் பாதுகாப்பு, கடல் வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்த "மரைன் எலைட்" படையை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-23 10:40 GMT
சென்னை,

மன்னர் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடாவில் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் "மரைன் எலைட்" படையை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.  

கடல் பாதுகாப்பு, கடல் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் இந்த "மரைன் எலைட்" படை செயல்படும் என தெரிவித்துள்ளது. 

தமிழக அரசு நிறுவவுள்ள "மரைன் எலைட்" படையில் இரு பிரிவுகள் இருக்கும் என்றும் ஒரு பிரிவுக்கு 5 கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்